பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க போட்டி
குன்னூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க போட்டி நடந்தது.;
குன்னூர்,
குன்னூர் அருகே சோகத்தொரை கிராமத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தொடக்க பள்ளி மாணவர்கள் 19 பேர், நடுநிலை பள்ளி மாணவர்கள் 17 பேர் படித்து வருகின்றனர். தன்னார்வலர்களான புஷ்பா, பிரியா ஆகியோர் மாதந்தோறும் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி ஊக்குவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கையெழுத்து, சதுரங்க போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஊர் தலைவர் பசுபதி பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரசு பள்ளியின் சிறப்புகள், திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.