செஸ் ஒலிம்பியாட் போட்டி: மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார்.;

Update:2022-07-13 23:04 IST

சென்னை,

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடர்ந்து மாமல்லபுரத்தை சுற்றியுள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதற்காக சுற்றுலாத்துறையின் கீழ் உள்ள அனைத்து இடங்களையும் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார்.

மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் பார்வையிடும் இடங்களை பராமரித்து வருவாயை ஈட்டுவதற்கு வழிவகை செய்யுமாறும், சுற்றுலா அலுவலகத்தை பார்வையிட்டு அங்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவரும் வகையில் மேம்படுத்தவும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

அர்ஜுனன் தபசு பகுதியைச் சுற்றி மின்விளக்குகள் ஏற்படுத்தி ஒலி ஒளி காட்சிகள் அமைத்து சுற்றுலாபயணிகள் அமர்ந்து கலை நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் வகையில் மேம்படுத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள 14 ஏக்கர் காலி மனையை சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு வருவாய் ஈட்டி தரும் வகையில் மேம்படுத்தி பராமரிக்கவும் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின் போது தமிழக அரசின் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் டாக்டர் சந்திரமோகன் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்