செஸ் ஒலிம்பியாட் போட்டி - டிக்கெட் விலை குறைந்தபட்சம் ரூ.200 ஆக நிர்ணயம்

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.200 முதல் அதிகபட்சம் ரூ.8,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-07-12 23:34 GMT

செங்கல்பட்டு,

இந்திய வரலாற்றில் முதல் முறையாக தமிழகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி புகழ் வாய்ந்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. வருகிற 28-ந் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 10-ந் தேதி வரை போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண்பதற்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.200 முதல் அதிகபட்சம் ரூ.8,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள், 19 வயதுக்கு உட்பட்டவர்கள், பெண்கள், தமிழக அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு 2 மணி நேரத்திற்கு ஒரு அரங்கில் ரூ.200-ஆகவும், மற்றொரு அரங்கில் ரூ.300-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் முழுவதும் போட்டியை பார்க்கும் இந்தியர்களுக்கு, அரங்குக்கு ஏற்ப டிக்கெட் கட்டணம் ரூ.2,000 மற்றும் ரூ.3,000ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு நாள் முழுவதும் போட்டியை பார்க்கும் வெளிநாட்டினருக்கு, அரங்குக்கு ஏற்ப ரூ.6,000 முதல் ரூ.8,000 வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்