செஸ் ஒலிம்பியாட் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களுக்கு நினைவு பரிசு - முதல்-அமைச்சர் வழங்கினார்
செஸ் ஒலிம்பியாட் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
சென்னை,
மாமல்லபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கிய 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடரின் இறுதி நாள் போட்டிகள் இன்று நடைபெற்றது. இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிறைவு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தலைவர் ஆர்கடி வோர்கோவிச், துணைத்தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றுள்ளனர். இந்த நிறைவு விழாவில் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா தொடங்கியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் செஸ் ஒலிம்பியாட் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். முன்னதாக இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் மானுவல் ஆரோனுக்கு முதல்-அமைச்சர் நினைவு பரிசு வழங்கினார்.
அதனை தொடர்ந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, விளையாட்டுத்துறை அமைச்சர் சிவமெய்யநாதன், சுற்றுலாத்துறை அமைச்சர் முனைவர் மதிவேந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.