செஸ் விளையாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

செஸ் விளையாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-07-26 19:15 GMT

ஸ்ரீரங்கம், ஜூலை.27-

ஸ்ரீரங்கம் தேவி தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் இடையே செஸ் விளையாட்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பள்ளி மைதானத்தில் சதுரங்க வடிவில் வரையப்பட்ட தளத்தில் சதுரங்க காய்களாக மாணவர்கள் பங்கேற்று செஸ் விளையாடும் நிகழ்ச்சியினை கலெக்டர் பிரதீப்குமார் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் விளையாட்டில் பங்கேற்ற மாணவ-மாணவிகளை பாராட்டினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்