சென்னசமுத்திரம் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா

குண்டம் விழா

Update: 2023-04-18 20:54 GMT

கொடுமுடி சென்னசமுத்திரத்தில் உள்ள பழமையான மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா கடந்த 11-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி கோவிலில் கம்பம் நடப்பட்டது. நேற்று முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நடைபெற்றது. கோவிலின் முன்பு குண்டம் அமைக்கப்பட்டு இருந்தது. பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனிதநீராடி உற்சவ அம்மன் சப்பரத்துடன் கோவிலுக்கு வந்தனர்.

இதைத்தொடர்ந்து வேல் பூசாரி, தட்டு பூசாரி, பந்த பூசாரி வரிசையாக குண்டம் இறங்கினர். அதன்பின்னர் ஆண், பெண் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சிலர் குழந்தைகளை வைத்துக்கொண்டு குண்டம் இறங்கினர்.

இன்று (புதன்கிழமை) பொங்கல் விழா, மாவிளக்கு பூஜை, கம்பம் பிடுங்கி காவிரியில் விடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. குண்டம் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்