சென்னை பல்கலைக்கழக இலவச கல்வி திட்டம்-ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்கும் மாணவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-04-22 00:44 GMT

சென்னை,

சென்னை பல்கலைக்கழகம், ஏழை மாணவர்களும் இளங்கலை படிப்புகளில் சேர்ந்து பயன் பெறும் வகையில், 'சென்னை பல்கலைக்கழக இலவச கல்வி திட்டம்' ஒன்றை நடைமுறைப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் 2024-25-ம் கல்வியாண்டில் இலவச கல்வி திட்டத்தின் கீழ் சென்னை பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியில் இருந்து www.unom.ac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

விண்ணப்பிக்கும் மாணவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், குடும்பத்தில் பட்டப்படிப்புக்கு வரும் முதல் தலைமுறையை சேர்ந்த மாணவர்கள், திருநங்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்திருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்