சென்னை: பிரியாணிக்கு பணம் கேட்டதால் கடை உரிமையாளரை தாக்கிய இளைஞர்கள்.!
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
சென்னை,
சென்னை, அயப்பாக்கம் பகுதியில் பிரியாணி வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் உரிமையாளரை தாக்கிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கம்ரூல் என்பவர் நடத்தி வரும் பிரியாணி கடைக்கு வந்த இரு இளைஞர்கள் பிரியாணி பார்சல் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றனர்.
அவர்களிடம் பணம் கேட்ட போது, கம்ரூலின் செல்போனை உடைத்து அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.