நெல்லை எஸ்.பி. சரவணனை கைது செய்து ஆஜர்படுத்த பிறப்பித்த உத்தரவுக்கு தடை
மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.;
சென்னை,
நெல்லை எஸ்.பி சரவணனை கைது செய்து ஆஜர்படுத்த மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நெல்லை எஸ்.பி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், நெல்லை எஸ்.பி. சரவணனை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்று மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.