சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு

சீர்காழி கோர்ட்டில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆய்வு செய்தார்.

Update: 2023-02-11 18:45 GMT

திருவெண்காடு:

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஒருங்கிணைந்த கோர்ட்டில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆதிகேசவலு நேற்று ஆய்வு மேற்கொண்டார், அப்ேபாது அவரை சீர்காழி நீதிமன்ற சார்பு நீதிபதி மும்தாஜ், நடுவர் நீதிபதி ரங்கேஸ்வரி, மாவட்ட உரிமையியல் நீதிபதி சோழவேந்தன் ஆகியோர் வரவேற்றனர். அப்போது அவரிடம் சீர்காழியில் மகிளா நீதிமன்றம் மற்றும் விரைவு நீதிமன்றம் அமைக்க கோரியும், நீதிமன்றத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப கோரியும் சீர்காழி வக்கீல்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் கட்டிடத்தின் மேல் தளத்தில் புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது வக்கீல்கள் சங்க தலைவர் வெங்கடேசன், செயலாளர் நெடுஞ்செழியன், பொருளாளர் ஞானபிரகாசம் மற்றும் வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் உடன் இருந்தனர்.

முன்னதாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆதிகேசவலு நேற்று மயிலாடுதுறை கோர்ட்டில் ஆய்வு மேற்கொண்டார். புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்திற்கென மாவட்ட நீதிமன்றம் அமைப்பது குறித்து கலெக்டர் மகாபாரதி மற்றும் நீதிபதிகள், அதிகாரிகளுடன் பேசினார். தொடர்ந்து கோர்ட்டு, நீதிபதிகள் குடியிருப்பு பகுதிகளை ஆய்வு செய்தார். முன்னதாக தரங்கம்பாடியில் நீதிமன்றக் கட்டிடம் கட்டுவதற்கான இடத்தினையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது முதன்மை மாவட்ட நீதிபதி கந்தகுமார், மயிலாடுதுறை கூடுதல் மாவட்ட நீதிபதி இளங்கோ, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், உதவி கலெக்டர் யுரேகா, அரசு வக்கீல் ராமசேயோன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்