சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சாமி தரிசனம்
சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சாமி தரிசனம்
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆதிகேசவலு குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார். அவரை கோவில் அலுவலர்கள் வரவேற்றனர். பின்னர் அவருக்கு வேதாரண்யேஸ்வரர் சுவாமி படத்தை செவ்வந்திநாத பண்டார சன்னதி வழங்கினார். முன்னதாக அகஸ்தியம் பள்ளியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியையும் பார்வையிட்டார். அப்போது அவருடன் மாவட்ட முதன்மை நீதிபதி கந்தகுமார், மாவட்ட தலைமை குற்றவியல் வக்கீல் கிருத்திகா, வேதாரண்யம் வக்கீல் சங்க தலைவர் பாரி மற்றும் பலர் உடன் இருந்தனர்.