பெயர் பலகையில் மோட்டார் சைக்கிள் மோதி சென்னை என்ஜினீயர் சாவு

தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு வந்த என்ஜினீயர் பெயர் பலகையில் மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் இறந்தார்.;

Update:2022-10-26 02:12 IST

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த ஜம்பை பகுதியை சேர்ந்தவர் விமல் (வயது 19). என்ஜினீயரான இவர் சென்னையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார்.

தீபாவளி பண்டிகையை கொண்டாட விமல் சொந்த ஊருக்கு சென்றிருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை ஜம்பை அருகே உள்ள வைரமங்கலத்தில் வசிக்கும் தன் நண்பர் பிரவீன் என்பவரை பார்ப்பதற்காக விமல் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

தலையில் படுகாயம்

நண்பரை சந்தித்த பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் வந்துகொண்டு இருந்தார். ஜம்பை கோம்புகரடு பள்ளம் என்ற இடத்தில் வந்தபோது நிலைதடுமாறிய மோட்டார்சைக்கிள் சாலையோரம் இருந்த பெயர் பலகையில் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட விமல், தலையில் படுகாயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்