சென்னை: குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றுதல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.;

Update:2023-11-14 17:57 IST

கோப்புப்படம் 

சென்னை, 

வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகின்றது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. மேலும் நாளையும் சென்னையில் மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது,

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் பெருநகர குடிநீர் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரை அகற்றுதல் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கு ஏதுவாக கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கும்.

பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க 044-45674567 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1916 ஆகிய எண்கள் மூலம் தொடர்பு கொண்டு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

மேலும் 300 தூர்வாரும் இயந்திரங்கள், 66 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 176 ஜெட்ராடிங் வாகனங்கள் என மொத்தம் 542 கழிவுநீரகற்றும் இயந்திரங்கள் கழிவுநீரகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்படும். 15 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றும் பணிகளை 2,149 களப்பணியாளர்கள் மேற்கொள்வார்கள், என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்