சென்னை சென்டிரல் - திருத்தணி மின்சார ரெயில் நாளை பகுதி நேர ரத்து
சென்னை சென்டிரல் - திருத்தணி மின்சார ரெயில் நாளை பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.;
சென்னை,
அரக்கோணம் - ஜோலார்பேட்டை வழித்தடத்தில் உள்ள அரக்கோணம் பணிமனையில் நாளை (திங்கட்கிழமை) மற்றும் 18-ந்தேதி மதியம் 12 மணி முதல் மதியம் 2 மணி வரையில் (2 மணி நேரம்) பராமரிப்பு பணி நடைபெறுவதால் சில மின்சார ரெயில்கள் பகுதி நேர ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்டிரலில் இருந்து நாளை மற்றும் 18-ந்தேதி காலை 10, 11.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரெயில்கள் அரக்கோணம் - திருத்தணி இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக திருத்தணியில் இருந்து இதே தேதிகளில் மதியம் 12.35, 2.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரெயில்கள் திருத்தணி - அரக்கோணம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.