செல்லமுத்து மாரியம்மன் கோவில் 37-ம் ஆண்டு திருவிழா
செல்லமுத்து மாரியம்மன் கோவில் 37-ம் ஆண்டு திருவிழா நடைபெற்றது.;
திருச்சி மேல சிந்தாமணி பழைய கரூர் ரோட்டில் செல்லமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் 37-ம் ஆண்டு திருவிழா மற்றும் அன்னதான விழா கடந்த 4-ந்தேதி கணபதி ஹோமத்துடன் முகூர்த்தக்கால் நட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மதியம் காவிரி ஆற்றில் இருந்து கரக உற்சவம், தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு வீதி உலா நிகழ்ச்சியும், இரவு அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் மற்றும் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. நேற்று காலை 10 மணிக்கு மேல் சந்தன கருப்புக்கு கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், மதியம் அடைசல் பூஜை மற்றும் அன்னதானம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு மேல் முத்து எடுத்து கஞ்சிவார்த்தல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா, கரகம், முளைப்பாரி ஆகியவை ஆற்றில் கரைத்தல் விடையாற்றி விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.