மூணாறு-உடுமலை சோதனை சாவடியில் வாகன தணிக்கை மும்முரம்

Update: 2022-09-25 12:59 GMT


கோவை மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதன் எதிரொலியாக மூணாறு-உடுமலை சோதனை சாவடியில் வாகன தணிக்கை மும்முரமாக நடந்து வருகிறது.

வாகன சோதனை

கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதன் எதிரொலியாக திருப்பூர் மாவட்டத்தில் போலீஸ் தரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.ஆங்காங்கே தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து சந்தேகப்படும் படியான நபர்கள் மற்றும் வாகனங்களை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவின் பேரில் உடுமலை உட்கோட்ட காவல்சரக பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல் தலைமையில் ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் இரவு பகலாக வாகனங்களை கண்காணித்து வருகிறார்கள்.

உடுமலை- மூணாறு சோதனை சாவடி

அந்த வகையில் தளி காவல் சரக பகுதியில் பள்ளபாளையம் அருகே உடுமலை- மூணாறு சாலையில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு போலீசார் இரவு பகலாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது வாகனங்களை தணிக்கை செய்தும் அதில் வருகின்ற நபர்கள் எங்கிருந்து வருகின்றனர?் எங்கு செல்கின்றனர் என்பது குறித்த விவரங்களையும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்