காசோலை மோசடி வழக்கு: சிவாஜி கணேசனின் மகன், பேரனுக்கு பிடிவாரண்ட்...!

காசோலை மோசடி வழக்கில் சிவாஜி கணேசனின் மகன், பேரனுக்கு சைதாப்பேட்டை கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

Update: 2022-11-28 15:11 GMT

சென்னை,

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார். இவரது மகன் துஷ்யந்த்தும் மனைவி அபிராமியும் தனியார் நிறுவனம் ஒன்று நடத்தி வருகின்றனர். இவர்கள் மயிலாப்பூரை சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் வர்த்தக நடவடிக்கைக்காக தொடர்பு வைத்துள்ளனர்.

இந்த நிலையில் வியாபார நடவடிக்கைக்காக துஷ்யந்த் சார்பாக ரூ.15 லட்சத்திற்கான 2 காசோலை கடந்த 2019-ம் ஆண்டு அளித்ததாகவும், ஆனால் வங்கியில் பணம் இல்லாததால் காசோலைகள் இரண்டும் திரும்பி வந்துவிட்டனர். வேண்டுமென்றே காசோலை அளித்து ஏமாற்றி உள்ளனர் என்று அந்த நிறுவனம் சைதாப்பேட்டை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

மேலும், இந்த பணத்திற்கு ராம்குமார் தரப்பில் உத்தரவாதம் தரப்பட்டது. எனவே அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கை சைதாப்பேட்டை விரைவு நீதிமன்றம் இன்று விசாரித்தது. அப்போது துஷ்யந்த் அவரது மனைவி அபிராமி, தந்தை ராம்குமார் ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் நீதிபதிகள் பிறப்பித்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கின் பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.   

Tags:    

மேலும் செய்திகள்