திருமங்கலம் யூனியன் அலுவலகம் முன்பு சாத்தங்குடி கிராம மக்கள் போராட்டம்

திருமங்கலம் அருகே சாத்தங்குடி கிராம மக்கள் 100 நாள் வேலை சம்பளம் வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-10-14 21:06 GMT

திருமங்கலம்

சம்பளம்

திருமங்கலம் யூனியன் சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த 20 பெண்கள் உள்பட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு நேற்று யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், வேலை கொடுத்த நாட்களுக்கு கடந்த 6 வாரமாக சம்பளம் கொடுக்கவில்லை.வேலையும் சரியாக வழங்கவில்லை என குற்றம் சாட்டினர். அத்துடன் சம்பளம் வழங்க கோரி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலரிடம் முறையிட்டால் சரியான பதில் கிடைக்கவில்லை எனவும் மக்கள் தெரிவித்தனர்.

மாவட்டம் முழுவதும்

இதைதொடர்ந்து யூனியன் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், மதுரையில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும் கடந்த நான்கு முதல் ஐந்து வாரங்களாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளன. இந்தப் பிரச்சினை இங்கு மட்டும் இல்லை, மதுரை மாவட்டம் முழுவதும் உள்ளது. இந்த பிரச்சினை தீர்வதற்கு நிதி வந்தவுடன் மற்ற யூனியன் அலுவலகங்களில் வழங்குவது போல் இங்கும் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்