சாத்தம்பட்டி தூய இஞ்ஞாசியர் ஆலய தேர் பவனி

சாத்தம்பட்டி தூய இஞ்ஞாசியர் ஆலய தேர் பவனி நடைபெற்றது.

Update: 2022-07-31 18:20 GMT

அன்னவாசல்:

இலுப்பூர் அருகே சாத்தம்பட்டியில் தூய இஞ்ஞாசியர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த மாதம் 22-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. விழாவையொட்டி தினமும் மாலை நவநாள் திருப்பலி பூஜைகள் நடைபெற்று வந்தன. திருவிழா சிறப்பு திருப்பலியை மறை வட்ட அதிபர் அருட்பணி அருளானந்தம் அடிகளார் நிறைவேற்றினார். பின்னர் மின் அலங்கார தேரை மந்திரித்து புனிதம் செய்து ஆலயத்தை சுற்றி முக்கிய வீதிகள் வழியாக இழுத்து வந்தனர். இதில் முதல் சப்பரத்தில் மைக்கேல் சம்மனசும், இரண்டாவது சப்பரத்தில் சூசையப்பரும், மூன்றாவது சப்பரத்தில் புனித தூய இஞ்ஞாசியர் சொரூபம் தாங்கி முக்கிய வீதிகளில் உலா வந்தன. அப்போது பக்தர்கள் மெழுகுவர்த்தி, மாலை, ஊதுபத்தி, தூபம் காட்டியும், காணிக்கை செய்து கிறிஸ்தவர்கள் வழிபட்டனர். இதில், மகுதுபட்டி, பாணிபட்டி, விட்டானிலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்