சாத்தனூர் சந்தைவெளி முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு
சாத்தனூர் சந்தைவெளி முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு;
கூத்தாநல்லூர் அருகே உள்ள சாத்தனூர் சந்தைவெளி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்க நடத்த கிராம மக்கள் தீர்மானித்தனர். இதையடுத்து கோவில் திருப்பணி வேலைகள் நடைபெற்றது. திருப்பணிகள் நிறைவுபெற்றதை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், யாத்ரா தானம், பூர்ணாகுதி, லட்சுமி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை கடங்கள் புறப்பாடு நடைபெற்று, கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.