பட்டய பொறியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு பட்டய பொறியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது;

Update: 2022-07-03 16:00 GMT

தென்காசி அருகே இலஞ்சியில் தமிழ்நாடு பட்டய பொறியாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் விஜய முருகன் தலைமை தாங்கினார். துணை பொது செயலாளர் குமார் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் அழகப்பன், துணைத்தலைவர் லோகநாதன், தலைமை நிலைய செயலாளர் மோகனசுந்தரம், அமைப்பு செயலாளர் சுந்தரலிங்கம், தேர்தல் ஆணையாளர் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு அலுவலர் கழக மாநில தலைவர் சவுந்தரராஜன், துணை அமைப்பாளர் சக்திவேல், பொது செயலாளர் துரைராஜ், பொருளாளர் செந்தில், மாவட்ட செயலாளர் ஜான் ஆகியோர் பேசினார்கள்.

கூட்டத்தில் பட்டயத்துறை பிரிவில் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட வேண்டிய பதவி உயர்வு உள்பட அனைத்து நிலைகளிலும் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தகுதி மற்றும் சரியான பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக தமிழ்நாடு அரசு தொழிற்பெயர்ச்சி அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் பிரபு மற்றும் சீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அரசு தொழிற் பயிற்சி நிலைய நெல்லை மண்டல செயலாளர் சாந்தி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்