அன்னியாளம் வரதராஜசாமி கோவில் தேரோட்டம்
தேன்கனிக்கோட்டை அருகே அன்னியாளம் வரதராஜசாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அன்னியாளம் கோவர்தனகிரி வரதராஜ சாமி கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி வரதராஜசாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கோவிலை சுற்றி வந்து தேர் மீது ஏற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அங்கு திரண்டு இருந்த திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து நிலை சேர்த்தனர். விழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம், நீர், மோர், பானகம் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை தேர்திருவிழா கமிட்டியினர் செய்திருந்தனர்.