பெரியகுளம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் காணப்பட்டது. அதேபோல் நேற்று காலை முதல் மதியம் வரையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் சிரமம் அடைந்தனர். இந்நிலையில் பகலில் திடீரென வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதைத்தொடர்ந்து மாலை 3 மணி அளவில் சாரல் மழை பெய்தது. இந்த மழை விட்டு விட்டு பெய்ததால் பொதுமக்கள் குடைகளை பிடித்தபடி வெளியே சாலைகளில் நடமாடினர்.