பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
திருப்பத்தூர் அருகே டான்போஸ்கோ நகரில் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்ஸ்பெக்டர் ஜெயந்தி பணியாற்றி வந்தார். கடந்த தீபாவளி பண்டிகைக்கு முன்பு சாராய வியாபாரிகளிடம் அன்பளிப்பு வழங்க வேண்டும் என அவர் வற்புறுத்தியதாக புகார் எழுந்தது.
அதனடிப்படையில், திருப்பத்தூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி தலைமையிலான போலீசார் கடந்த மாதம் 14-ந் தேதி திருப்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.
இந்தநிலையில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.