தென் மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம்
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் சுரங்கப்பாதை பணிகள் நடப்பதால் தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில், திருச்செந்தூர் ரெயில்கள் திண்டுக்கல் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் சுரங்கப்பாதை பணிகள் நடப்பதால் தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில், திருச்செந்தூர் ரெயில்கள் திண்டுக்கல் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.
திண்டுக்கல்லுடன் நிறுத்தம்
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட கோவில்பட்டி-குமாரபுரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில்வே கேட்டுகளின் அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிக்காக அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கோவையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16322) வருகிற 3-ந் தேதி மற்றும் 17-ந் தேதிகளில் திண்டுக்கல் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து காலை 7.35 மணிக்கு புறப்படும் நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16321) மேற்கண்ட நாட்களில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு கோவை புறப்பட்டு செல்லும்.
தாம்பரம்-அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.20691) வருகிற 2-ந் தேதி மற்றும் வருகிற 16-ந் தேதிகளில் திருச்சி வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா ரெயில் (வ.எண்.20692) வருகிற 3-ந் தேதி மற்றும் 17-ந் தேதிகளில் திருச்சியில் இருந்து வழக்கமான நேரத்துக்கு தாம்பரம் புறப்பட்டு செல்லும். திருச்செந்தூர்-பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16732) வருகிற 3-ந் தேதி மற்றும் 17-ந் தேதிகளில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்தில் பாலக்காடு புறப்பட்டு செல்லும். மறுமார்க்கத்தில், பாலக்காடு-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16731) மேற்கண்ட நாட்களில் திண்டுக்கல் ரெயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும்.
திருமங்கலம் வரை நீட்டிக்க
திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22627) வருகிற 3-ந் தேதி மற்றும் 17-ந் தேதிகளில் விருதுநகர் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் திருவனந்தபுரம்-திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (வ.எண்.22628) மேற்கண்ட நாட்களில் விருதுநகர் ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு திருச்சி புறப்பட்டு செல்லும்.
குருவாயூரில் இருந்து மதுரை வழியாக சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16128) வருகிற 2-ந் தேதி மற்றும் 16-ந் தேதிகளில் நெல்லையில் இருந்து தென்காசி வழியாக விருதுநகர் வந்தடையும். இந்த ரெயில் மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர் ஆகிய ரெயில் நிலையங்களுக்கு செல்லாது.
இதற்கிடையே, தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்து மாற்றத்தில் திண்டுக்கல், திருச்சி ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும் ரெயில்களை மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் இவற்றில் ஏதாவது ஒரு ரெயில் நிலையம் வரை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.