சூரமங்கலம்:-
சேலம் மேக்னசைட் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் சேலம் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
பராமரிப்பு பணி
சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம் ஜங்ஷன் ெரயில் நிலையம் அடுத்த மேக்னசைட் ெரயில் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் அன்றைய தினம் சேலம் வழியாக இயக்கப்படும் ெரயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பெங்களூரு- காரைக்கால் எக்ஸ்பிரஸ் ெரயில் (வண்டி எண் 16529), காரைக்கால்- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ெரயில் (வண்டி எண் 16530) ஆகிய ெரயில்கள் நாளை மறுநாள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மேலும் அரக்கோணம்- சேலம் பயணிகள் ெரயில் (வண்டி எண் 16087) நாளை மறுநாள் ஜோலார்பேட்டை முதல் சேலம் வரை ரத்து செய்யப்படுகிறது. அரக்கோணம் முதல் ஜோலார்பேட்டை வரை மட்டும் இயக்கப்படும். சேலம்- அரக்கோணம் ெரயில் (வண்டி எண் 16088) நாளை மறுநாள் சேலம் முதல் ஜோலார்பேட்டை வரை இயக்கப்படாது,
லோக்மானிய திலக் எக்ஸ்பிரஸ்
கோவை - லோக்மானிய திலக் எக்ஸ்பிரஸ் ெரயில் (வண்டி எண் 11014) மாற்றுப்பாதையான திருப்பத்தூர், பங்காரு பேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக செல்லும். தர்மபுரி, ஓசூர் வழியாக இந்த ரெயில் செல்லாது.
பெங்களூரு- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ெரயில் (வண்டி எண் 12677) மாற்றுப்பாதையான கிருஷ்ணராஜபுரம், பங்காரு பேட்டை, திருப்பத்தூர் வழியாக இயக்கப்படும். இந்த ெரயில் கர்மெலாரம், ஓசூர், தர்மபுரி வழியாக செல்லாது.
தன்பாத் எக்ஸ்பிரஸ்
இதற்கிடையே ஆலப்புழா- தன்பாத் தினசரி எக்ஸ்பிரஸ் ெரயில் (வண்டி எண் 13352) ஆலப்புழாவில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட வேண்டியது ஒரு மணி நேரம் 30 நிமிடம் காலதாமதமாக 7.30 மணிக்கு புறப்படும்.
எர்ணாகுளம்- பெங்களூரு தினசரி எக்ஸ்பிரஸ் ெரயில் (வண்டி எண் 12678) எர்ணாகுளம் ெரயில் நிலையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட வேண்டியது ஒரு மணி நேரம் காலதாமதமாக 10.10 மணிக்கு புறப்படும்.
நாகர்கோவில்- மும்பை எக்ஸ்பிரஸ் ெரயில் (வண்டி 16340) இயக்கத்தில் 50 நிமிடம் காலதாமதம் ஏற்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.