மதுரை-தேனி சிறப்பு ரெயில் நேரத்தில் மாற்றம்

மதுரை-தேனி சிறப்பு ரெயில் நேரத்தில் நாளை முதல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-05-30 20:57 GMT

மதுரை, 

மதுரையில் இருந்து தேனிக்கு அகலப்பாதையில் 12 வருடங்களுக்கு பின்னர் கடந்த 26-ந் தேதி ரெயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரெயில் மதுரையில் இருந்து தேனி செல்லும் பஸ் பயண நேரத்தை விட குறைவாகவும், கட்டணம் குறைவாகவும் இருந்தது. இதற்கிடையே, மதுரை - தேனி சிறப்பு ரெயில் நேரத்தில் நாளை (புதன்கிழமை) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06701) மதுரையில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 25 நிமிடங்கள் முன்னதாக காலை 8.05 மணிக்கு புறப்பட்டு காலை 9.35 மணிக்கு தேனி சென்று சேரும். மறுமார்க்கத்தில் தேனியில் இருந்து புறப்படும் ரெயில் (வ.எண்.06702) தேனியில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு இரவு 7.35 மணிக்கு பதிலாக இரவு 7.50 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்து சேரும். இந்த ரெயில் வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது. இருப்பினும் கூடுதல் நேரம் எடுத்து கொள்ளப்படுகிறது. இந்த நேர மாற்றத்தால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்