அரையாண்டு விடுமுறையில் மாற்றம் - பள்ளி கல்வி ஆணையர் அறிவிப்பு

5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;

Update: 2022-12-23 10:46 GMT

சென்னை,

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை நாளை முதல் தொடங்குகிறது. இந்த விடுமுறைக்கு பின் ஜனவரி 2-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் அரையாண்டு விடுமுறை நாளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் வெளியிட்ட அறிவிப்பில்,

ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்கள் ஏற்படு செய்யப்பட்டுள்ளது. இதனால் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஜனவரி 5-ம் தேதி பள்ளிகள் துவங்கும்.

மற்றபடி 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தப்படி ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்