எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.;

Update:2022-07-15 21:49 IST

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

சென்னை சென்டிரல்-சூலூர்பேட்டை(வண்டி.எண்: 06741) இடையே அதிகாலை 5.20 மணிக்கும், மறுமார்க்கமாக சூலூர்பேட்டை-சென்டிரல் (06742) இடையே மதியம் 12.35 மணிக்கும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற 19-ந்தேதி(செவ்வாய்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

ஆவடி-சென்டிரல்(66000) இடையே அதிகாலை 4.25 மணிக்கும் மறுமார்க்கமாக, சென்டிரல்-ஆவடி(66003) இடையே இரவு 9.15 மணிக்கும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற 19-ந்தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

விஜயவாடா-சென்டிரல்(12711) இடையே காலை 6.10 மணிக்கு மறுமார்க்கமாக, சென்டிரல்-விஜயவாடா(12712) இடையே மதியம் 2.10 மணிக்கும் புறப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் வருகிற 19-ந்தேதி மற்றும் ஆக்ஸ்ட் 2-ந்தேதியில்(செவ்வாய்கிழமை) கூடூர்-சென்னை சென்டிரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

திருச்சி-பகத் கி கோதி(20482) இடையே காலை 8.10 மணிக்கு புறப்படும் ஹம்சபார் எக்ஸ்பிரஸ் ஆகஸ்ட் 20-ந்தேதியில்(சனிக்கிழமை) 50 நிமிடங்கள் தாமதமாக காலை 9 மணிக்கு இயக்கப்படும்.

தாம்பரம்-ஜசீதிஹ்(12375) இடையே மதியம் 12.55 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகஸ்ட் 20-ந்தேதியில் 50 நிமிடங்கள் தாமதமாக மதியம் 1.45 மணிக்கு இயக்கப்படும்.

கொச்சுவேலி-செகந்திராபாத்(17229) இடையே காலை 7 மணிக்கு புறப்படும் சபரி எக்ஸ்பிரஸ் வருகிற 18-ந்தேதி முதல் ஆக்ஸ்ட் 3-ந்தேதி வரை 2 மணி நேரம் 50 நிமிடம் தாமதமாக காலை 9. 50 மணிக்கு இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்