பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம்...!
பட்டாபிராம் பணிமனையில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள உள்ளதால் இன்று இரவு இயக்கப்படும் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;
சென்னை,
இதுகுறித்து சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்,
பட்டாபிரம் மிலிட்டரி சைடிங் -ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் (வண்டி எண்: 43892) இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
வேளச்சேரி-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே இரவு 10.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் (வண்டி எண்:43799) இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதற்கு பதிலாக வேளச்சேரி-ஆவடி இடையே இரவு 10.30 மணிக்கு சிறப்பு பயணிகள் ரெயில் இயக்கப்படும்.
சென்ட்ரல் -திருவள்ளூா் இடையே இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் (வண்டி எண்:43255) இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதற்கு பதிலாக சென்ட்ரல் -திருவள்ளூா் இடையே இரவு 11.50 மணிக்கு சிறப்பு பயணிகள் ரெயில் இயக்கப்படும்.
சென்ட்ரல் -ஆவடி இடையே இரவு 11.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் (வண்டி எண்:66007) இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதற்கு பதிலாக சென்ட்ரல் -ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு சிறப்பு பயணிகள் ரெயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.