புதிய தலைமை செயலக திறப்பு விழா: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சந்திரசேகர் ராவ் அழைப்பு
தெலுங்கானாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநில தலைமை செயலகத்தின் திறப்பு விழாவிற்கு பங்கேற்குமாறு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் அழைப்பு விடுத்தார்.;
சென்னை,
தெலுங்கானாவில் புதிதாக மாநில தலைமை செயலகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா பிப்ரவரி மாதம் 17ம் தேதி தெலுங்கானாவில் நடைபெறுகிறது.
புதிய தலைமை செயலக திறப்பு விழாவில் கலந்துக் கொள்ளுமாறு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார். இதைதொடர்ந்து, பிப்ரவரி மாதம் 17ம் தேதி செகந்திரபாத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திராவிலிருந்து 10 மாவட்டங்களை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்டது. இம்மாநிலத்திற்கு ஐதராபாத் தலைநகரமாக உள்ளது. இங்கு பிரம்மாணடமான புதிய தலைமை செயலக கட்டுமான பணிகள் விரு விருப்புடன் நடைபெற்று வருகிறது. பணிகள் இறுதி கட்டம் எட்டி உள்ளது.