வதாரண்யேஸ்வரர் கோவிலில் சண்டி ஹோமம்
மயிலாடுதுறை வதாரண்யேஸ்வரர் கோவிலில் சண்டி ஹோமம் நடந்தது.
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வதாரண்யேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சண்டி ஹோமம் நடந்தது. கோவில் வளாகத்தில் அமைந்திருந்த யாகசாலை மண்டபத்தில் இரண்டு காலங்களாக சிறப்பு பூஜைகளும், ஹோமங்களும் நடைபெற்றது. தொடர்ந்து 9 கன்னிகை பூஜை, 9 சுகாசினி பூஜை, பிரம்மச்சாரி பூஜை, வடுக பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை, ஒட்டக பூஜையும் நடந்தது. தொடர்ந்து துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பூஜைகள் மற்றும் ஹோமங்களை ஆலய தலைமை அர்ச்சகர் பாலச்சந்திர சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர். இதில் ஆலய கண்காணிப்பாளர் அகோரம், ஆடிட்டர் குரு சம்பத்குமார், நகரமன்ற உறுப்பினர் பொறியாளர் ரமேஷ் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.