தமிழகத்தின் 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

Update: 2023-11-21 15:38 GMT

சென்னை, 

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தற்போது, தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல், குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் மற்றொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகம் முழுவதுமே பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை உள்பட 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, குமரி, நெல்லை, தென்காசியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்