தமிழகத்தின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;
சென்னை,
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்யும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.