தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உட்பட 12 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உட்பட 12 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-09-25 00:22 GMT

கோப்புப்படம்

சென்னை,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் செப்டம்பர் 30 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் செப்டம்பர் 30 வரை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இரவு முதல் பரவலாக கனமழை பெய்தது. சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது.

இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை உட்பட 12 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்