அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு
தென்மாவட்டங்களில் 31-ந் தேதி மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று (வியாழக்கிழமை) முதல் 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதிலும் 31-ந் தேதி தென்மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.