தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...!

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;

Update:2023-10-14 18:25 IST

சென்னை, 

தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, காரைக்கால், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில்  ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு வருகிற 20 ம் தேதி வரை தமிழகத்தின் குறிப்பிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரபிக்கடல் பகுதிகளில் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இங்கு 40 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்