நாகர்கோவில் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு 8 பேர் கும்பல் கைவரிசை

நாகர்கோவில் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 8 பேர் கும்பல் சங்கிலியை பறித்து சென்றது.

Update: 2023-01-26 21:57 GMT

ஆரல்வாய்மொழி:

நாகர்கோவில் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 8 பேர் கும்பல் சங்கிலியை பறித்து சென்றது.

சங்கிலி பறிப்பு

தோவாளை தெக்கூரை சேர்ந்தவர் முத்து. இவருடைய மனைவி வசந்தா (வயது 60). முத்து, மனைவியுடன் நேற்று மோட்டார் சைக்கிளில் நாகர்கோவில் சென்றார். பின்னர் அவர்கள் இரவு 10 மணியளவில் வீட்டுக்கு புறப்பட்டனர்.

நாகர்கோவில் அருகே உள்ள வெள்ளமடத்தை அடுத்த கிறிஸ்துநகர் பகுதியில் மோட்டார் சைக்கிள் வரும்போது பின்னால் 4 மோட்டார் சைக்கிள்களில் 8 பேர் வந்தனர். அந்த கும்பலை சேர்ந்தவர்்கள் முத்து மற்றும் வசந்தாவை விரட்டி வந்தனர். அதில் ஒரு மர்மநபர் திடீரென்று வசந்தா கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதனால் உஷாரான வசந்தா தங்க சங்கிலியை கெட்டியாக பிடித்து கொண்டார். இதனால் ஒரு பகுதி மட்டும் மர்மநபர் கைக்கு சென்றது.

போலீசார் விசாரணை

இந்த சம்பவத்தில் வசந்தா மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், சம்பவ இடத்துக்கு ஆரல்வாய்மொழி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி 8 பேர் கும்பலை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்