மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது.;
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராமநாதன் வீதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன். இவருடைய மனைவி ரெங்கநாயகி (வயது77). இவர் நேற்று காலை தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ரெங்கநாயகி கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்கள் 2 பேரையும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை அடிப்படையாக கொண்டு மன்னார்குடி போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.