மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் திருச்சி மன்னார்புரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். இதில் மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன், வட்ட பொருளாளர் பழனியாண்டி ஆகியோர் கண்டன உரையாற்றினர். கேங்மேன் பயிற்சி பணியாளர்களுக்கு சொந்த மாவட்டங்களுக்கு விருப்ப இடமாறுதல் உத்தரவை விரைந்து வழங்கவேண்டும், கள உதவியாளராக பதவி மாற்றம் செய்யவேண்டும், 2 ஆண்டுகளாக உள்ள பயிற்சி காலத்தை 3 மாதமாக குறைக்கவேண்டும், உள்முகத் தேர்வு மூலம் பதவி உயர்வு வழங்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.