சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மத்திய மந்திரிகள் சாமி தரிசனம்

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மத்திய மந்திரிகள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-09-01 15:20 GMT

சுசீந்திரம்:

மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் இணை மந்திரி முருகன் ஆகிய இருவரும் குமரி மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளனர். அதன் அடிப்படையில் நேற்று காலை 7 மணி அளவில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு அவர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். மத்திய மந்திரிகளை திருக்கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் சுசீந்திரம் நகர பா.ஜ.க. தொண்டர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.

பின்னர் தட்சிணாமூர்த்தி சன்னதி, கொன்றையடி சன்னதி, இசைத்தூண்கள், தாணுமாலய சாமிசன்னதி, திருவேங்கடம் விண்ணவரம் பெருமாள் சன்னதி, நவக்கிரக மண்டபம், கோவில் சுற்றுபிரகாரங்கள், 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சாமி ஆகிய சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் செய்த பிற்பாடு மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா கோவிலின் தனித்துவம் குறித்து கோவில் வருகை பதிவேட்டில் இந்தி மொழியில் பதிவு செய்தார். மத்திய மந்திரிகள் வருகையையொட்டி சுசீந்திரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

---

Tags:    

மேலும் செய்திகள்