வேளாண் மண்டலமான தஞ்சையில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டம்?

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சை மாவட்டத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2023-04-04 05:15 GMT

சென்னை,

வேளாண் மண்டலம் என அறிவிக்கப்பட்ட தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தஞ்சை மாவட்டம் ஒரத்த நாடு தாலுகாவில் உள்ள 11 இடங்களிலும், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்திலும் நிலக்கரி எடுக்க திட்டம் என கூறப்படுகிறது.

அதாவது வடசேரி, மகாதேவப்பட்டினம், கூப்பாச்சிக்கோட்டை,உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை,கீழக்குறிச்சி, அண்டமி, கொடியாலம், கருப்பூர், பரவத்தூர், நெம்மேரி உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே புதிய நிலக்கரி சுரங்கத்திட்டம் குறித்து விவசாயிகள் கவலை அடைய வேண்டாம் எனவும் பாதுகாப்பட்ட வேளாண் மண்டல சட்டம் அமலில் இருப்பதால், நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதி தரப்படாது. நிலத்தை மத்திய அரசுக்கு லீஸ்க்கு கொடுக்கும் அதிகாரம் மாநிலம் அரசு மட்டுமே உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்