'மத்திய அரசின் நிதி தவறாக பயன்படுத்தப்படவில்லை' - சபாநாயகர் அப்பாவு பேட்டி

‘மத்திய அரசின் நிதி தவறாக பயன்படுத்தப்படவில்லை’ என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

Update: 2023-08-02 19:36 GMT

தமிழக சபாநாயகர் அப்பாவு குற்றாலத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

மத்திய அரசுக்கும், தமிழகத்திற்கும் ஜி.எஸ்.டி. வரி தொடர்பான ஒப்பந்தம் உள்ளது. தமிழகத்தில் இருந்து 1 ரூபாய் வரி மத்திய அரசுக்கு நாம் செலுத்தினால் 17 பைசா நமக்கு வரும்.

ஆனால் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து மத்திய அரசுக்கு 1 ரூபாய் செலுத்தினால் அந்த மாநிலத்திற்கு நிதியாக 2 ரூபாய் வருகிறது. ஏன் இந்த பாரபட்சம்?. மத்திய அரசின் நிதி தமிழகத்தில் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று கூறுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். மத்திய அரசின் நிதி தவறாக பயன்படுத்தப்படவில்லை.

சமீபத்தில் கூட அரசுடன் ஒரு நிறுவனம் தொழில் தொடங்குவதற்காக ரூ.1,600 கோடி ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதுவரை 4½ லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. 1971-ம் ஆண்டு முதல் இன்றுவரை தமிழகத்தில் கல்வி வளர்ச்சி நன்றாக உள்ளது.

இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்