நீர் மேலாண்மை குறித்து மத்திய குழுவினர் ஆய்வு

திருவாடானை யூனியன் அலுவலகத்தில் நீர் மேலாண்மை குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.;

Update: 2023-09-26 18:45 GMT

தொண்டி, 

திருவாடானை யூனியன் அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நீர் மேலாண்மை தொடர்பான பணிகள் குறித்து மத்திய நீர் பாதுகாப்பு குழுவின் ஆய்வுக்குழு தலைவர் ஆலம் முஹம்மத், தேசிய நீர் மேலாண்மை திட்ட குழு உறுப்பினர்கள் சுதர்சன், தனேஷா கரீமா, ஆலோசகர் ராதா பிரியா, மாநில ஒருங்கிணைப்பாளர் யோகலட்சுமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வ முகிலன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த குழுவினர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலை ராஜன், சந்திரமோகன் மற்றும் ஒன்றிய பொறியாளர்களுடன் கலந்துரையாடினர். அப்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நீர் மேலாண்மை திட்ட பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 47 ஊராட்சிகளில் நிறைவேற்றப்பட்டுள்ள தடுப்பணைகள், சமுதாய கிணறுகள் போன்ற நீர் மேலாண்மை திட்டங்கள் அப்பகுதியில் பொதுமக்களுக்கு எவ்வாறு பயனுள்ளதாக அமைந்துள்ளது என்றும், இதனால் அப்பகுதியில் கிடைத்துள்ள நிலத்தடி நீர் ஆதாரம் குறித்தும் கேட்டறிந்தனர். ஆய்வின் போது ஒன்றிய பொறியாளர்கள் செல்வகுமார், ஜெயந்தி, வேதவல்லி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகேசன், சுபா ஆகியோர் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்