மத்திய பா.ஜனதா அரசின் ஓரவஞ்சனைகள் தோலுரிக்கப்பட்டுள்ளன: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
திராவிட மாடல் நலத்திட்டங்களை எடுத்துச்சொல்லி, மத்திய அரசின் ஓரவஞ்சனைகளை தமது பேச்சாளர்கள் தோலுரித்ததாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழகம் முழுவதும் தி.மு.க. அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள் நடந்து வருகிறது.
இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-
எல்லோருக்கும் எல்லாம். 161 பொதுக்கூட்டங்கள், 90 பேச்சாளர்கள், லட்சக்கணக்கான மக்கள். தமிழ்நாட்டை வளமாக்கும் நமது பட்ஜெட் விளக்கும் பொதுக்கூட்டங்கள்.
திராவிட மாடல் நலத்திட்டங்களை எடுத்துச்சொல்லி, மத்திய பா.ஜனதா அரசின் ஓரவஞ்சனைகளைத் தோலுரித்த நமது பேச்சாளர்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.