என்எல்சி விவகாரத்தில் விளை நிலங்களை கையகப்படுத்துவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் - சரத்குமார் பேட்டி
நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் கூட்டணி குறித்தும் இன்னும் முடிவு செய்யவில்லை என்று சமக தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.;
சேலம்,
சேலத்தில் சமக சார்பில் நடைபெற்ற சமத்துவ விருந்து விழாவில் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் பேசியதாவது:-
இந்த சமத்துவ விருந்தை ஒற்றுமை வலியுறுத்தும் விருந்தாக எடுத்து கொள்ள வேண்டும். சமத்துவம் என்பது கொள்கை அடிப்படையில் மட்டும் இல்லாமல் அனைவரது எண்ணங்களிலும் இருக்க வேண்டும். தானத்தில் சிறந்ததானம் அன்னதானம். அந்த வகையில் மாதந்தோறும் 10 பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.
என்எல்சி விவகாரத்தில் விளை நிலங்களை கையகப்படுத்துவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். ஜனநாயக நாட்டில் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் வைத்து வெற்றி பெறலாமே தவிர, மக்களின் நலத்திட்டங்களை வைத்து அரசியல் செய்யக்கூடாது.
நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் கூட்டணி குறித்தும் இன்னும் முடிவு செய்யவில்லை. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் சமத்துவ மக்கள் கட்சிக்கு இல்லை. பணமில்லா அரசியல் என்ற நிலையில் தேர்தலை தனித்து சந்திப்பதே எங்கள் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.