10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தஞ்சை மாவட்டம் 100 சதவீதம் தேர்ச்சி இலக்கை எட்ட வேண்டும்கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தல்

தஞ்சை மாவட்டம் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி இலக்கை எட்ட வேண்டும் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தி உள்ளார்.;

Update: 2023-02-09 19:40 GMT

தஞ்சை மாவட்டம் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி இலக்கை எட்ட வேண்டும் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தி உள்ளார்.

ஆசிரியர்களுக்கு சான்றிதழ்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் எண்ணும் எழுத்தும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திய ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் எண்ணும் எழுத்தும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திய 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற செய்து நூற்றுக்கு நூறு தேர்ச்சி இலக்கினை அடைய செய்ய வேண்டும்.

பயிற்சி ஏடு

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் பொருள்புரிந்து படிக்கவும், எழுதவும் அடிப்படை கணக்குகள் செய்வதும் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். இதில் மாணவர்களின் கற்றல் நிலைக்கு ஏற்ப பாடப்பயிற்சி ஏடு வழங்கப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் கும்பகோணம் பாணாதுறை மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவன் மிதுன்ரோகித், ஜம்முகாஷ்மீரில் நடைபெற்ற உறைவாள் போட்டியில் தேசிய அளவில் 3-ம் இடம் பெற்றதற்கான பரிசு மற்றும் கேடயங்களை, கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

இந்த விழாவில் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி சிவகுமார், மாவட்ட கல்வி அலுவலர்கள் திராவிடச்செல்வம், திருநாவுக்கரசு மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்