ரூ.10 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை

ஏரிக்கோடி பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது.

Update: 2023-10-06 18:06 GMT

அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட மருதவல்லிபாளையம் ஊராட்சி ஏரிக்கோடி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் செதுவாலை மற்றும் மருதவல்லிபாளையம் கிராமத்திற்கு தனிநபர் நிலத்தின் வழியாக சென்று வந்தனர். மேலும் மழை காலங்களில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என நந்தகுமார் எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

அதன்பேரில் அணைக்கட்டு ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்டு சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் அதற்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் கலந்துகொண்டு சாலை மற்றும் சிறுபாலம் அமைப்பதற்கான பணிகளை பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தார். அப்போது சாலையை தரமாக அமைத்து விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் பாபு, ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன், குமாரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மருதவல்லிபாளையம் ஊராட்சியில் கடந்த 2 வருடமாக சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர மேற்கொள்ளாததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது சம்பந்தமாக மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்