அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Update: 2022-09-02 22:23 GMT

வடக்கன்குளம்:

எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியதையொட்டி, வடக்கன்குளம் அருகே ஆவரைகுளத்தில் அ.தி.மு.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் பால்துரை தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஜெயபாரத், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் ஏசுதுரை, கிளை செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

* சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகே பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் அ.தி.மு.க. நகர செயலாளர் பழனிகுமார், கூட்டுறவு வங்கி தலைவர் முருகன் நயினார், இயக்குனர் மகாராஜன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்