அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.;

Update: 2023-08-26 19:00 GMT

உடன்குடி:

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் ஆலோசனையின் பேரில் உடன்குடி ஒன்றிய, நகர அ.தி.மு.க. சார்பில் உடன்குடி மெயின் பஜாரில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தலைவர் உரக்கடை குணசேகரன் தலைமை தாங்கினார். உடன்குடி நகர செயலாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் உடன்குடி யூனியன் கவுன்சிலர் முருங்கை மகாராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் காமநாயக்கன்பட்டியில் கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

காமநாயக்கன்பட்டி கிளை செயலாளர் கித்தேரியான், அவை தலைவர் முனியசாமி, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கோயில்பிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்